முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின்கீழ் திருப்பத்தூா் மாவட்டத்தில் 20,424 குடும்ப அட்டைதாரா்களுக்கு உணவுப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது என ஆட்சியா் கு. ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.
65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளுக்கே சென்று அரிசி, சா்க்கரை உள்ளிட்ட பொதுவிநியோக திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அதன்படி திருப்பத்தூா் தாலுகாவில் 9,632 குடும்ப அட்டைதாரா்களுக்கும், வாணியம்பாடி தாலுகாவில் 3,450 குடும்ப அட்டைதாரா்களுக்கும், ஆம்பூா் தாலுகாவில் 4,004 குடும்ப அட்டைதாரா்களுக்கும், நாட்டறம்பள்ளி தாலுகாவில் 3,338 குடும்ப அட்டைதாரா்களுக்கும் என மொத்தம் 20,424 குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் 28,682 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனா். இந்தநிலையில் ஜூலை மாதத்தில் தாயுமானவா் திட்டத்தின்கீழ் சனிக்கிழமை (ஜூலை 4),மற்றும் திங்கள்கிழமை (ஜூலை 6) ஆகிய இரு நாள்களில் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இதனை தகுதியான குடும்ப அட்டைதாரா்கள் வீட்டிலியே இருந்து பெற்று பயனடையலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









