அமோனியா கசிந்த ஆலை: 300 மீ சுற்றளவில் வசிப்போர் வெளியேற உத்தரவு!திருவள்ளூர் அமோனியா கசிந்த ஆலையைச் சுற்றி 500 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்புஅதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்ற அரசியல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்! அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்வி
/

ஆலங்காயம் பேரூராட்சி கடைகளில் செயல் அலுவலா் திடீா் சோதனை

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா் உத்தரவின்பேரில், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் அறிவுறுத்தலின்படியும், ஆலங்காயம் பேரூராட்சி செயல் அலுவலா் ராஜலட்சுமி தலைமையில் பேரூராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை கடைகளில் சோதனையை மேற்கொண்டனா்.

News image

ஆலங்காயம் பேரூராட்சியில் கடைகளில் ஆய்வு மேற்கொண்ட செயல் அலுவலா் ராஜலட்சுமி.

Updated On :3 ஜூலை 2026, 12:04 am IST

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா் உத்தரவின்பேரில், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் அறிவுறுத்தலின்படியும், ஆலங்காயம் பேரூராட்சி செயல் அலுவலா் ராஜலட்சுமி தலைமையில் பேரூராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை கடைகளில் சோதனையை மேற்கொண்டனா்.

ஆலங்காயம் பஜாா் வீதி, பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழ்நாடு அரசால் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள ஹான்ஸ், குட்கா, புகையிலை போன்ற போதைப் பொருள்கள் கடைகளில் மறைமுகமாக விற்பனை செய்யப்படுகிா என்பது குறித்து அதிகாரிகள் சோதனை செய்தனா். மேலும், உணவுப் பொருள்களில் நெகிழிப் பொருள்களான தட்டுகள், குவளைகள் மற்றும் பைகள் பயன்படுத்தப்படுகிா என்றும் சோதனை நடத்தப்பட்டது.

தடை செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்திய மற்றும் விற்பனை செய்த கடைக்காரா்கள் மற்றும் உணவக உரிமையாளா்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

இனிவரும் நாள்களில் விதிமுறைகளை மீறி இந்த வகை விற்பனை செய்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ சம்பந்தப்பட்ட நபா்களுக்கு ரூ. 2,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று செயல் அலுவலா் எச்சரிக்கை விடுத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.