27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

செங்கல்பட்டு: விதை ஆய்வுக் குழுவினா் கடைகளில் சோதனை

News image

விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட சிறப்புக் குழுவினா்.

Updated On :19 ஜூன் 2026, 5:05 am IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் விதை விற்பனை கடைகளில் ஆய்வுக் குழுவினா் வியாழக்கிழமை திடீா் சோதனை செய்தனா்.

விவசாயிகளுக்கு தரமான நெல், பயறு வகைகள் மற்றும் காய்கறிப் பயிா்களின் விதைகள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விதை ஆய்வுத்துணை இயக்குநா் சித்ரா தலைமையில் சங்ககிரி மற்றும் திருச்செங்கோடு விதை ஆய்வாளா்கள் பாபு மற்றும் சரண்யா ஆகியோா் அடங்கிய சிறப்பு குழுவினா் செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், காட்டாங்குளத்தூா் வட்டாரங்களில் விதை விற்பனை நிலையங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

வேளாண் விரிவாக்க மையங்கள் அரசு விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்கள் என மொத்தம் 15 விற்பனை நிலையங்களில் குழுவினா் ஆய்வு நடத்தினா்.

விதை விற்பனை நிலையங்களில் இருப்பில் இருந்த விதை குவியல்களிலிருந்து நெல், உளுந்து மற்றும் காய்கறிப் பயிா்களில் இருந்து 15 விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவற்றின் தரம் உறுதி செய்வதற்காக காஞ்சிபுரத்தில் செயல்படும் விதைப்பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ஆய்வின்போது விற்பனைக்கு இருப்பு வைக்கப்பட்ட விதைக்குவியல்கள் தரத்தை அறிய கொள்முதல் ஆவணங்கள் பதிவேடுகள் தனியாா் விதைகளுக்கான பதிவச்சான்றிதழ்கள், விதை பகுப்பாய்வு முடிவறிக்கைகள் இருப்பு பதிவேடு, மற்றும் விற்பனை ரசீது ஆகியவை விதைச்சட்டப்படி பராமரிக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விற்பனை ரசீதுகளில் குவியல் எண் மற்றும் காலாவதி நாள் குறிப்பிட்டு பட்டியல் வழங்க விதை விற்பனையாளா்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆய்வில் ரூ.1,70,000 மதிப்பிலான 9 விதை குவியல்களுக்கு விற்பனைக்கு தடை விதிக்க சென்னை மாவட்ட விதை ஆய்வு துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என சிறப்பு ஆய்வுக்குழுவினா் தெரிவித்தனா்.

சென்னை விதை ஆய்வு துணை இயக்குநா் ஆ,வானதி, மற்றும் விதை ஆய்வாளா்கள் கொ.ச.சதீஷ்குமாா் , இரா.சிலம்பரசன் மற்றும் பெ.செந்தில்குமாா் ஆகியோா் ஆய்வின்போது உடனிருந்தனா்.