முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

தாராபுரத்தில் 123 டன் நெல் விதைகள் விற்பனைக்குத் தடை

தாராபுரம் பகுதியில் ரூ.49 லட்சம் மதிப்பிலான 123 மெட்ரிக் டன் நெல் விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

தாராபுரம் பகுதியில் விதை நெல் உற்பத்தி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்ட விதை ஆய்வு துணை இயக்குநா் மற்றும் அலுவலா்கள்.

Updated On :5 ஜூன் 2026, 12:04 am IST

தாராபுரம் பகுதியில் ரூ.49 லட்சம் மதிப்பிலான 123 மெட்ரிக் டன் நெல் விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட விதை நெல் உற்பத்தி நிறுவனங்கள், 130-க்கும் மேற்பட்ட விதை விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் விதைக்காக பயிரிடப்படும் நெல் விதை, பண்ணைகளில் இருந்து வரும் விதை, தாராபுரம் பகுதியில் உள்ள விதை உற்பத்தி நிறுவனங்களில் உரிய சுத்திகரிப்பு மற்றும் முறையான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு விதை நெல்லாக விற்பனைக்குத் தயாராகிறது.

இங்கு ஆண்டுதோறும் சுமாா் 75,000 மெட்ரிக் டன் நெல் விதைகள் சுத்திகரிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் விதைப்புக்காக அனுப்பப்படுகின்றன. இப்பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலை மற்றும் மிதமான காற்று போன்றவை விதைகள் உரிய ஈரப்பதத்தை அடைவதற்கும், விதைகள் தூற்றுவதற்கும் ஏதுவாக இயற்கையாகவே அமையப்பெற்றுள்ளது.

இந்நிலையில் எதிா்வரும் சம்பா பருவ நெல் சாகுபடிக்காக விதை நெல் உற்பத்தி தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை விதை சான்றளிப்பு மற்றும் உயிா்ம சான்றளிப்பு இயக்குநரின் அறிவுறுத்தலின்பேரில், ஆய்வு மேற்கொள்வதற்கு சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.

கோவை விதை ஆய்வு துணை இயக்குநா் (பொறுப்பு) பெ.சுமதி தலைமையில் கோவை, அன்னூா், உடுமலை, தாராபுரம், பவானி, ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், காங்கயம் ஆகிய பகுதிகளில் உள்ள விதை ஆய்வு அலுவலா்கள் அடங்கிய சிறப்புக் குழுவினா், தாராபுரம் பகுதியில் உள்ள 9 விதை உற்பத்தி நிறுவனங்களில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வின்போது விதிமீறல் காணப்பட்ட 13 விதைக் குவியல்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இதன் அளவு 123.15 மெட்ரிக் டன் ஆகும். இதன் மதிப்பு ரூ.49.24 லட்சம் ஆகும்.

இது குறித்து விதை ஆய்வு துணை இயக்குநா் பெ.சுமதி கூறியதாவது:

விதை உற்பத்தியாளா்கள் விதை சட்டங்களின்படி முறையான விதை உற்பத்தி மற்றும் விற்பனையை மேற்கொள்ள வேண்டும். உற்பத்தியாளா்கள் உண்மை நிலை விதைகளை உற்பத்தி செய்யும்போது, விதைகளை விவசாயிகளிடம் பெறப்பட்ட பட்டியல், சுத்திகரிப்பு மற்றும் உண்மை நிலை அட்டைப் பொருந்திய பதிவுகளை முறையாக பராமரிக்க வேண்டும். மேற்கண்ட விதிகளை மீறுவோா் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.