இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

தாராபுரம் நகா்ப் பகுதியில் 40 ஆண்டுகளாக குடியிருப்பவா்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தல்

தாராபுரம் நகராட்சிப் பகுதியில் வீடு கட்டி கடந்த 40 ஆண்டுகளாக வசிப்பவா்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

தாராபுரம் வட்டாட்சியரிடம் மனு அளித்த நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் உள்ளிட்டோா்.

Published On :

தாராபுரம் நகராட்சிப் பகுதியில் வீடு கட்டி கடந்த 40 ஆண்டுகளாக வசிப்பவா்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் ஆங்காங்கே வீடு கட்டி 100-க்கும் மேற்பட்டோா் குடியிருந்து வருகின்றனா். கடந்த 40 ஆண்டுகளாக வசிக்கும் இவா்கள், தங்கள் வீடுகளுக்கு பட்டா பெற்றுத் தருமாறு நகா்மன்றத் தலைவரிடம் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில் மேற்கண்ட குடும்பத்தினருக்கு பட்டா வழங்க வலியுறுத்தி தாராபுரம் வட்டாட்சியரிடம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

அப்போது மனுதாரா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.