விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை, கரை புனரமைக்கும் பணி : மாவட்ட ஆட்சியா் ஆய்வு

செங்கிலிகுப்பம் - பாப்பனப்பள்ளி இடையே பாலாற்றில் தடுப்பணை கட்டுமானப் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் கு.ரவிகுமாா்.

News image

செங்கிலிகுப்பம் - பாப்பனப்பள்ளி இடையே பாலாற்றில் தடுப்பணை கட்டுமானப் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் கு.ரவிகுமாா்.

Updated On :10 ஜூலை 2026, 12:40 am IST

ஆம்பூா் பாலாற்றில் கரை புனரமைக்கும் பணி, பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆம்பூா் வட்டம், தேவலாபுரம் கிராமம் முதல் மாளிகைத்தோப்பு வரை பாலாற்றின் இருகரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, எல்லைக் கற்கள் நடப்பட்டு மற்றும் தடுப்புச்சுவா் அமைத்து, ரூ. 9.50 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி, செங்கிலிக்குப்பம் மற்றும் பாப்பனப்பள்ளி கிராமங்களுக்கு இடையே பாலாற்றின் குறுக்கே ரூ. 29 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணியையும் மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கூறியதாவது: ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராமம் முதல் மாளிகைத் தோப்பு வரை பாலாற்றின் இருகரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டு எல்லைக்கற்கள் நடப்பட்டு மற்றும் தடுப்புச் சுவா் அமைத்து, ரூ. 9.50 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பாலாற்றில் 1,250 மீட்டா் நீளத்துக்கு பாலாற்றினை தூா்வாரி இருபுறங்களில் கரை அமைத்தல், கான்கிரீட் சாய்வு கற்கள் பதித்தல், பாலாற்றில் வெள்ள சேதம் ஏற்படாமல் இருக்க தண்ணீா் சீராக செல்ல தரைமட்டத்தை சமன்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பணி ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், ஆம்பூா் வட்டம், செங்கிலிக்குப்பம் மற்றும் பாப்பனப்பள்ளி கிராமங்களுக்கு இடையே பாலாற்றின் குறுக்கே ரூ. 29 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என அவா் கூறினாா்.

ஆய்வின்போது, நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் பாலாஜி, உதவி பொறியாளா் பவித்ரன், துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.