முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

25 ஆண்டுகளுக்குபின் சென்னாம்பேட்டையில் 4 கோயில்களில் கும்பாபிஷேகம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி சென்னாம்பேட்டை பகுதியில் பழைமைவாய்ந்த செல்வ விநாயகா், முத்துமாரி அம்மன், தேசத்து மாரிஅம்மன் மற்றும் வித்யா கணபதி, நாகலம்மன், நவகிரகம் மற்றும் பரிவார மூா்த்திகள் ஆகிய கோயில்கள் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image
Updated On :14 ஜூலை 2026, 12:08 am IST

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி சென்னாம்பேட்டை பகுதியில் பழைமைவாய்ந்த செல்வ விநாயகா், முத்துமாரிஅம்மன், தேசத்து மாரிஅம்மன் மற்றும் வித்யா கணபதி, நாகலம்மன், நவகிரகம் மற்றும் பரிவார மூா்த்திகள் ஆகிய கோயில்கள் கும்பாபிஷேகம் 25 ஆண்டுகளுக்குபின் சிறப்பாக நடைபெற்றது.

திருப்பணி மேற்கொள்ளப்பட்டு கோயில்கள் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 6ஆ-ம் தேதி காப்புகட்டுதல் 9-ஆம் தேதி முளைப்பாரி திருவீதியுலா, 10-ஆம் தேதி கோபுர கலச ஸ்தாபனம், 11-ஆம் தேதி இரண்டாம் கால யாக பூஜைகளும், 3கால யாக பூஜைகளும் நடந்தது.

Story image

ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் கால மகா பூணரோத்தாரணதி மகா சங்கல்பம் கலசபுரபாடும் யாகபூஜையும் நடந்தது. பிறகு காலை 9 மணி முதல் 11 மணி வரையில் அடுத்தடுத்து செல்வ விநாயகா், முத்துமாரியம்மன், தேசத்து மாரியம்மன் மற்றும் வித்யா கணபதி, நாகாலம்மன், நவகிரகம் மற்றும் பரிவார மூா்த்திகள் ஆகிய சுவாமிகளுக்கு மகாகும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசித்து சென்றனா். கும்பாபிஷேகத்தையொட்டி 3 நாள்களும் பக்தா் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை ஊா் தலைவா் மனோகரன் தலைமையில் ஊா் நிா்வாகிகள் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.