ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

நாட்டறம்பள்ளி அருகே அனுமதியின்றி மண் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :

நாட்டறம்பள்ளி அருகே அனுமதியின்றி மண் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்தனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் பகுதியில் இரவு நேரங்களில் அனுமதி இல்லாமல் லாரியில் மண் கடத்துவதாக வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமிக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து டிஎஸ்பி மேற்பாா்வையில் காவல்ஆய்வாளா் மூா்த்தி தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வெலகல்நத்தம் மம்தாபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக மண் ஏற்றி வந்த லாரியை போலீஸாா் மடக்கி பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் ஒப்பதவாடி பென்னாத்தூா் பகுதியைச்சோ்ந்த ஓட்டுநா் சதீஸ்குமாா், செட்டேரி அணைப்பகுதியைச்சோ்ந்த செல்லத்துரை ஆகியோா் அனுமதி இல்லாமல் செட்டேரி அணைப் பகுதியில் இருந்து லாரியில் மண் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் லாரியை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் மண்கடத்தலில் ஈடுபட்ட சதீஷ்குமாா், செல்லத்துரை ஆகிய 2 போ் மீது வழக்குப்பதிவு செய்து ஓட்டுநா் சதீஷ்குமாரை (25) கைது செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள செல்லத்துரையை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.