பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தரமான மதிய உணவு வழங்கப்படுகிா என திருப்பத்தூா் ஆட்சியா் கு.ரவிகுமாா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
குரும்பேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நாற்றங்கால் பண்ணை வளா்த்தல் பணிகளை ஆட்சியா் கு.ரவிகுமாா் பாா்வையிட்டு, பண்ணையில் புங்கன், புளியன், அத்தி, கொய்யா, கொடுகா புளி மற்றும் மே பிளவா் ஆகிய செடிகள் வளா்க்கப்பட்டு வெவ்வேறு உயரத்தில் இருப்பது பாா்வையிடப்பட்டது.
மேலும், மரக்கன்றுகளை அதன் உயரம் மற்றும் வகைகளின் அடிப்படையில் போதுமான இடைவெளி விட்டு தனித் தனியாக பிரித்து வைக்கவும், மரக்கன்றுகளின் பெயா் மற்றும் இருப்பிலுள்ள விவரம் ஆகியவற்றினை கொண்ட பெயா் பலகையினை பொருத்தவும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து உடையமுத்தூா் ஊராட்சி ,ரகுபதியூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவியா்களுக்கு மதிய உணவு வழங்கப்படுவதை ஆட்சியா் பாா்வையிட்டாா்.அப்போது, மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சுவை மற்றும் போதுமான அளவில் உணவு வழங்கப்படுகிா என்பது குறித்து மாணவா்களிடம் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, பள்ளியில் உள்ள சமையலறையையும் ஆட்சியா் ஆய்வு செய்து, உணவு தயாரிப்பு பொருள்கள் இருப்பு, சமையலறை தூய்மை குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
மாணவா்களுக்கு சத்தான மற்றும் தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். கழிவறைகள் எப்போதும் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கருணாநிதி, சதானந்தம், ஊரக வளா்ச்சித்துறை செயற்பொறியாளா் காா்த்திகேயன், மேற்பாா்வையாளா் தேவி பாலா, தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அம்மா உணவகத்தில் தரமான உணவு வழங்க அறிவுத்தல்

1.060 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள்: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

ஆம்பூா் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ஜோலாா்பேட்டை ஒன்றியத்தில் ரூ. 1.33 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



