தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

தடை செய்யப்பட்ட போதைப் பாக்கெட்டுகள் பறிமுதல்: பெட்டிக் கடைக்காரா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :5 ஜூன் 2026, 5:45 am IST

திம்மாம்பேட்டை அருகே அரசால் தடை செய்யப்பட்ட 4 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பைக்கில் எடுத்து வந்த பெட்டி கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.

வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை உதவி காவல் ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை காலை தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான தகரகுப்பம் செக் போஸ்ட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அதன் வழியாக பைக்கில் வந்த நபரை சந்தேகத்தின்பேரில், நிறுத்தி விசாரித்தனா். பிறகு வாகனத்தில் இருந்த பையில் சோதனை செய்த போது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் நடத்திய விசாரணையில், திருப்பத்தூா் பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வரும் குபேந்திரன் (52) என்பதும், விற்பனைக்காக ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியில் இருந்து வாங்கிக் கொண்டு வந்ததாகவும் கூறியுள்ளாா்.

பிறகு அவரிடமிருந்து 4 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து குபேந்திரனை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.