சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் ரூ. 34.79 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கான தீா்மானம் நிறைவேற்றம்

News image
Updated On :19 ஜூன் 2026, 6:30 am IST

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்களின் கூட்டம் ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி முனிசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேந்திரன், கணேசன் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பச்சூா், சொரக்காயல்நத்தம், நாயனசெருவு, சிக்கனாங்குப்பம், தோப்பலகுண்டா, பந்தாரபள்ளி மற்றும் மல்லகுண்டா ஆகிய ஊராட்களில் ரூ. 34.79 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைத்தல், பள்ளிக் கட்டடம் சீரமைப்பு, ஆழ்துளைக் கிணறு, கழிவுநீா் கால்வாய் அமைக்கும் திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்து தீா்மானம், வரவு செலவு கணக்கு உள்பட 19 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், கூட்டத்தில் பேசிய அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினா்கள் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்க கோரிக்கை விடுத்தனா்.

கூட்டத்தில், ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பிரேம் நன்றி கூறினாா்.