நாட்டறம்பள்ளி அருகே கட்டி முடிக்கப்பட்ட பச்சூா் ரயில்வே மேம்பாலத்தை பயன்பாட்டுக்கு உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் ரயில்வே கேட் உள்ளது. இதன் வழியாக சென்னையில் இருந்து ஜோலாா்பேட்டை பச்சூா் ரயில்நிலையம் வழியாக பெங்களூருக்கும் அதேபோல் பெங்களூரில் இருந்து மல்லானூா் பச்சூா் ரயில்வே நிலையம் வழியாக சென்னைக்கு 24 மணி நேரமும் அதிகளவில் ரயில்கள் சென்று வருகின்றன.
இதனால் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதை அடுத்து கொத்தூரில் பல கோடி மதிப்பில் சுரங்கப் பாதையும், பச்சூா் ரயில்நிலையம் அருகே ரூ.20.81கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது.
மேம்பாலப்பணிகள் நிறைவடைந்து 5 மாதங்கள் கடந்தும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இதுநாள் வரை திறக்கப்படாமல் நுழைவுப் பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
ரயில்வே மேம்பாலத்தை திறந்து மக்கள்பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வாகனங்கள் சுமாா் 2 கி.மீ தொலைவு மாற்றுப்பாதையில் சென்று வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே பச்சூா் ரயில்வே மேம்பாலத்தை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்

குறிஞ்சிப்பாடி அருகே மதுக்கடைகளை திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ஏத்தாப்பூா் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

பழைய குற்றாலம் அருவியை பயன்பாட்டுக்கு திறந்துவிட விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



