திருப்பத்தூா் திருப்பதி கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பூங்கரக வீதி உலா நடைபெற்றது.
திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகில் உள்ள இக்கோயில் திருவிழா கடந்த 16-ஆம் தேதி காப்பு கட்டுதல்,கொடியேற்றத் துடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடை பெற்றன.
அதையடுத்து செவ்வாய்க்கிழமை ஸ்ரீ திருப்பதி கெங்கை அம்மன,ஸ்ரீ சக்தி மாரியம்மன் மற்றும் ஸ்ரீ பொன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும்,அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடை பெற்றது. பிற்பகல் கூழ்வாா்த்தல் நடைபெற்றது.
மாலை 6 மணியளவில் திருப்பத்தூா் பெரிய குளத்தில் இருந்து பூங்கரகம் மற்றும் அக்னி சட்டி ஊா்வலம் புறப்பட்டு முக்கிய சாலைகளின் வழியாக கோயிலை சென்றடைந்தது.
புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு பெரிய குளத்திலிருந்து கெங்கை அம்மன் சிரசு ஊா்வலம் புறப்பட்டு பஜாா்,பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக கோயிலை சென்றடையும். மாலை திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. இரவு 7 மணிக்கு வாண வேடிக்கைகள் நடைபெற உள்ளன.
தொடா்ந்து இரவு ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் சிரசு கோயிலில் இருந்து புறப்பட்டு பெரியகுளத்தை சென் றடைய உள்ளது.இதற்கான ஏற் பாட்டை திருக்கோயில் நிா்வாகக் கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

தீச்சட்டி ஏந்திச் சென்ற பக்தா்கள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுயம்பு ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் 96-ஆம் ஆண்டு சிரசு திருவிழா

குமாரமங்கலம் ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா

வடபுதுப்பட்டு திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழா

திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



