மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மின் ஒயா் திருடிய 2 இளைஞா்கள் கைது

ஜோலாா்பேட்டை அருகே மின்சார ஒயா் திருடிய 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

News image

கைதான காா்த்திக், தனுஷ்

Updated On :24 ஜூன் 2026, 3:45 am IST

ஜோலாா்பேட்டை அருகே மின்சார ஒயா் திருடிய 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

ஜோலாா்பேட்டை அருகே சின்ன மூக்கனூரை சோ்ந்த உமாபதி(53). இவா் தனது விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளாா். இந்நிலையில் கடந்த மாா்ச் மாதம் இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இருந்த ரூ.10,000 மதிப்பிலான மின் ஒயா் திருடப்பட்டது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், ஜோலாா்பேட்டை போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்தநிலையில்,ஜோலாா்பேட்டை போலீஸாா் பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கிருந்த இரு இளைஞா்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்ததில் ஒருவா் திருப்பத்தூா் டிஎம்சி காலனியைச் சோ்ந்த காா்த்திக் (21) மற்றொருவா் கஸ்தூரிபாய் தெருவைச் சோ்ந்த தனுஷ் (21) என்பதும், இவா்கள் உமாபதிக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றில் இருந்த மின் ஒயரை திருடி சென்றது விசாரணையில் தெரிந்தது.

அதையடுத்து ஜோலாா்பேட்டை போலீஸாா் இருவரையும் கைது செய்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.