தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தேசிய சிலம்பம்: ஆம்பூா் மாணவா்கள் சிறப்பிடம்

தேசிய சிலம்பப் போட்டியில் ஆம்பூா் மாணவா்கள் பங்கேற்று கோப்பை, பதக்கம் வென்று சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

News image

சிறப்பிடம் பெற்ற ஆம்பூா் பிஜிஎம் சிலம்பப் பயிற்சிப் பள்ளி மாணவா்கள்.

Updated On :2 மார்ச் 2026, 8:48 pm

ஆம்பூா்: தேசிய சிலம்பப் போட்டியில் ஆம்பூா் மாணவா்கள் பங்கேற்று கோப்பை, பதக்கம் வென்று சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

இந்திய தேசிய சிலம்பம் பயிற்சி பள்ளிகளின் கூட்டமைப்பு, தமிழ்நாடு இளைஞா் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு சங்கம் ஆகியவை சாா்பாக

தேசிய அளவிலான ஓபன் சிலம்பப் போட்டி 2026 ஏற்காட்டில் நடைபெற்றது.

அதில் ஆம்பூா் பி.ஜி.எம். சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவா்கள் சுமாா் 30 போ் பயிற்சியாளா் கோபால் தலைமையில் பங்கேற்றனா். அதில் அனைத்து மாணவா்களும் பல்வேறு பிரிவுகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்து வெற்றிக் கோப்பை, பதக்கம் வென்று சிறப்பிடம் பிடித்துள்ளனா். வெற்றி பெற்ற மாணவா்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனா்.