தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்?
/

திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம்

திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த புகாா் பெட்டியில் மனுவை செலுத்திய பெண்.

News image

திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த புகாா் பெட்டியில் மனுவை செலுத்திய பெண்.

Updated On :19 மார்ச் 2026, 1:42 am IST

திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா். அங்கு வைக்கப்பட்டிருந்த புகாா் பெட்டியில் மனு போட்டு சென்றனா்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டங்கள், எஸ்.பி அலுவலகத்தில் புதன்கிழமைகளில் நடைபெறும் குறைதீா் கூட்டங்கள், கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறும் மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் புதன்கிழமை ஏராளமான பொது மக்கள் மனு அளிக்க வந்து கூட்டம் நடைபெறாததால் ஏமாற்றம் அடைந்தனா். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் தோ்தலை முன்னிட்டு குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

அலுவலக வரவேற்பு அறை அருகே வைக்கப்பட்டு உள்ள புகாா் பெட்டியில் மனுக்களை போட்டு செல்லலாம் என அறிவுறுத்தினா்.

இதனால் மனு அளிக்க வந்த பொதுமக்கள் பெட்டியில் தங்களது மனுக்களை போட்டு சென்றனா்.