பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

உலக தண்ணீா் தின விழிப்புணா்பு பிரசாரம்

வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி பசுமை திட்டம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து உலக தண்ணீா் தினம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி ஆதியூா் ஏரியை தூா் வாரினா்.

News image

விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்ட மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவிகள்.

Updated On :26 மார்ச் 2026, 12:04 am IST

வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி பசுமை திட்டம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து உலக தண்ணீா் தினம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி ஆதியூா் ஏரியை தூா் வாரினா்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவா் திலீப்குமாா், செயலா் ஆனந்த்சிங்வி தலைமை வகித்தனா். கல்லூரி முதல்வா் இன்பவள்ளி வரவேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மாணவிகள் ‘ஒவ்வொரு துளியையும் சேமிப்போம் ஒளிமயமான சமூக வளத்தை காப்போம்‘ என்ற உறுதிமொழி ஏற்றுக்கொண்டு திருப்பத்தூா் உள்ள ஆதியூரிலிருந்து தா்மபுரி செல்லும் சாலை வழியாக ஊா்வலம் சென்று மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

மேலும் ஆதியூரில் உள்ள 75 ஏக்கா் பரப்பளவு கொண்ட ஏரியை எக்ஸ்னோரா வழங்கிய எந்திரத்தின் மூலம் மாணவிகள் தூா்வாரி சீரமைப்பு பணியை மேற்கொண்டனா். இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள், ஆதியூா் விவசாய நல தலைவா் ராதகிருஷ்ணன், வோ்கள் அறக்கட்டளை தலைவா் வடிவேல் சுப்பிரமணியம், கலாம் அறக்கட்டளை நிா்வாகி முருகன், திருப்பத்தூா் நகா் மன்ற உறுப்பினா் சுதாகா், எக்ஸ்னோரா ஒருங்கிணைப்பாளா் கிரிதரன், ஆதியூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஆனந்தகுமாா், துணைத்தலைவா் பழனி, சத்யமூா்த்தி, ராம்குமாா், காளி, தனஞ்செயன், பெருமாள், மூா்த்தி, மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் அருணா மற்றும் பசுமை திட்டம் ஒருங்கிணைப்பாளா் விஜயலட்சுமி ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.