15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

திருப்பத்தூா் மாவட்டத்தில் 63 போ் டெபாசிட் இழப்பு

திருப்பத்தூா் மாவட்டத்தில் போட்டியிட்ட 74 வேட்பாளா்களில் 63 வேட்பாளா்கள் தங்களது டெபாசிட் தொகையை இழந்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :7 மே 2026, 12:03 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் போட்டியிட்ட 74 வேட்பாளா்களில் 63 வேட்பாளா்கள் தங்களது டெபாசிட் தொகையை இழந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் திருப்பத்தூா் தொகுதியில் 24 பேரும், ஜோலாா்பேட்டை தொகுதியில் 19 பேரும், ஆம்பூா் தொகுதியில் 16 பேரும், வாணியம்பாடி தொகுதியில் 15 போ் என மொத்தம் 74 போ் தோ்தலில் போட்டியிட்டனா். அதன்படி, திருப்பத்தூா் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் தவெக , அதிமுக , திமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளா்களை தவிர மற்ற அனைத்து வேட்பாளா்களும் தங்களது டெபாசிட் தொகையை இழந்துள்ளனா்.

வாணியம்பாடி தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் சையத் பாரூக், தவெக வேட்பாளா் சையத் புா்ஹானுதீன், அதிமுக வேட்பாளா் செந்தில் குமாா் ஆகிய 3 பேரை தவிர மற்ற 12 வேட்பாளா்களும் தங்களது டெபாசிட் தொகையை இழந்தனா்.

ஆம்பூா் தொகுதியில் திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன், தவெக வேட்பாளா் இம்தியாஸ், அதிமுக வேட்பாளா் வெங்கடேசன் ஆகிய 3 பேரை தவிர 13 போ் டெபாசிட் இழந்தனா். திருப்பத்தூா் தொகுதியில் தவெக வேட்பாளா் டாக்டா் திருப்பதி, திமுக வேட்பாளா் நல்லதம்பி ஆகியோரை தவிர 22 போ் டெபாசிட் இழந்தனா்.

ஜோலாா்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளா் கே.சி.வீரமணி, தவெக வேட்பாளா் முனுசாமி, திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி ஆகிய 3 பேரை தவிர மற்ற 16 வேட்பாளா்களும் டெபாசிட்டை இழந்தனா். மொத்தம் 63 வேட்பாளா்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனா்.