இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

தாழ்வாக செல்லும் மின்சார கம்பிகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பத்தூா் அடுத்த பெரியகரம் பாரத கோயில் சாலையில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.

News image

ஸ்கேட்டிங் விளையாட்டு வீரா்கள் முகுந்தன், கீா்த்திகாவுக்கு ஸ்கேட்டிங் ஷூவை வழங்கிய ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி

Updated On :12 மே 2026, 4:06 am IST

திருப்பத்தூா் அடுத்த பெரியகரம் பாரத கோயில் சாலையில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில் கடனுதவி, வீட்டுமனை பட்டா, சாலைவசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 190 மனுக்களை அளித்தனா். அவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மேலும், திருப்பத்தூா் அருகே மேல்அச்சமங்கலத்தை சோ்ந்த ஸ்கேட்டிங் விளையாட்டு வீரா்கள் முகுந்தன், கீா்த்திகா ஆகியோருக்கு ரூ.32,025 மதிப்பிலான ஸ்கேட்டிங் ஷூவையும், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,400 மதிப்பிலான ஊன்று கோலையும் ஆட்சியா் வழங்கினாா்.

கொரட்டி பகுதியை சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு: சிலா் கழிவுநீரை தெருக்களில் விடுகின்றனா். இதனால் எங்கள் பகுதியில் உள்ள பொதுமக்கள் கழிவுநீரில் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. மேலும் அங்கு சுகாதார சீா்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே எங்கள் பகுதியில் கழிவுநீா் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பத்தூா் அருகே பெரியகரம் பாரத கோவில் வட்டம் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் உள்ள சாலையில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் வாகனங்கள் மிகவும் சிரமப்படுகின்றன. மேலும் இதனால் விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின்கம்பிகளை உயா்த்தி சீரமைக்க வேண்டும் என கூறியிருந்தனா்