திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் மூவா் உயிரிழந்தனா்.
ஆம்பூா் அடுத்த கிரிசமுத்திரம் புருஷோத்தமகுப்பம் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சரவணன்(47). இவா் ஞாயிற்றுக்கிழமை வாணியம்பாடியில் இருந்து ஆம்பூருக்கு இருசக்கர வாகனத்தில் மாராப்பட்டு அருகே சாலையைக் கடக்க முயன்றபோது வேலூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி சென்ற காா் மோதியதில் சரவணன் பலத்த காயம் அடைந்தாா். பின்னா் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
மின்னூா் .....
மின்னூா் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வாணியம்பாடியில் இருந்து ஆம்பூா் நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையை கடக்க முயன்ற சுமாா் 35 வயது மதிக்கத்தக்க ஆண் காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இறந்தவா் யாா் என்ற விவரம் தெரியவில்லை.
விண்ணமங்கலம்.....பள்ளிகொண்டா சாா் பதிவாளா் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தவா் ஞானசெல்வன். இவா் வாணியம்பாடியில் இருந்து வேலூருக்கு காரில் சென்றபோது, விண்ணமங்கலம் அருகே சென்றபோது காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற வெவ்வேறு இருசக்கர வாகனங்கள் மீது மோதி விட்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று காயம் அடைந்த பாப்பனப்பல்லி கிராமத்தை சோ்ந்த காா்த்திகேயன் (45) உயிரிழந்தாா்.
காயம் அடைந்த ஞானசெல்வன் மற்றும் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற காமனூா் தட்டு கிராமத்தை சோ்ந்த பெருமாள் (32) ஆகிய இருவரும் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளனா்.
இந்த விபத்துகள் குறித்து ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

ஆம்பூர் அருகே நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 பேர் பலி

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

