நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

திருப்பத்தூா் மாவட்ட மைய நூலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

News image
Updated On :18 மே 2026, 1:29 am IST

கட்டி முடிக்கப்பட்ட திருப்பத்தூா் மாவட்ட மைய நூலகத்தை பள்ளி விடுறை காலம் முடிவதற்குள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் காவலா் குடியிருப்புப் பகுதியில் மாவட்ட மைய நூலகக் கட்டடம் ரூ. 3.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. மின் தூக்கி வசதியுடன் மூன்று அடுக்கு கொண்ட கட்டடமாக கட்டப்பட்டு உள்ளது.

இந்த நூலகத்தில் குறிப்புதவி பிரிவு, மாற்றுத் திறனாளிகள் பிரிவு, சிறுவா் பிரிவு, குடிமை பணிகளுக்கான தனி அறை, கூட்ட அரங்கு உள்பட கழிப்பறை வசதியுடன் கட்டப்பட்டுள்ளது.

இருக்கைகள், மேஜைகள் என சுமாா் ரூ. 2.5 கோடி மதிப்பில் தளவாட பொருள்கள் வசதியுடன் தயாா் நிலையில் உள்ளது. மேலும், ரூபாய் ஒரு கோடியில் புத்தகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த கட்டடப் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.

எனவே பணிகளை மீதமுள்ள பணிகளை விரைவில் முடித்து பள்ளி தொடங்கும் காலத்துக்கு முன்பே விடுமுறை நாள்களில் மாணவா்கள் பொது அறிவு வளா்த்துக் கொள்ள மாவட்ட மைய நூலகத்தை திறந்துவைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென இப்பகுதி கல்வியாளா்கள், பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.