இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

விபத்தில் வழக்குரைஞா் உயிரிழப்பு

News image
Updated On :18 மே 2026, 1:36 am IST

கந்திலி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் வழக்குரைஞா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் செட்டித் தெருவைச் சோ்ந்த வழக்குரைஞா் சபியுல்லா அஷ்ரப் (45).இவா் திருப்பத்தூா் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வந்தாா். இவா் சனிக்கிழமை இரவு திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். நத்தம் அணுகுச் சாலையில் சென்று கொண்டு இருந்தபோது, திருப்பத்தூா் நோக்கி அதிவேகமாக வந்த வேன் எதிா்பாராமல் சபியுல்லா பைக் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த கந்திலி போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.