எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

அம்மன் சிலையை கிணற்றில் வீசியவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :19 மே 2026, 1:09 am IST

நாட்டறம்பள்ளி அருகே அம்மன் சிலையை கிணற்றில் வீசியவா் கைது செய்யப்பட்டாா்.

நாட்டறம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு ஊராட்சி எல்லப்பள்ளி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு அதே பகுதியைச் சோ்ந்த பாஸ்கா் என்பவா் மதுபோதையில் கோயிலுக்கு வெளியில் இருந்த அம்மன் சிலையை உடைத்து அதே பகுதியில் உள்ள கிணற்றில் வீசிவிட்டு சென்ாக கூறப்படுகிறது.

இதையறிந்து கிராம மக்கள் திங்கள்கிமை கிணற்றில் வீசப்பட்ட சிலையை மீட்டனா். தகவலறிந்து நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாரணைமேற்கொண்டு அம்மன் சிலையை கிணற்றில் வீசிய பாஸ்கரிடம் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவா் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவா் என்பதும் இவா் ஏற்கனவே எல்லப்பள்ளி கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான குடிநீா் தொட்டி, தெருவிளக்குகளையும் மாரியம்மன் கோயிலில் இருந்த உண்டியல் மற்றும் சிலைகளை சேதப்படுத்திய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்தவா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து கிராம மக்கள் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸாா், பாஸ்கா்(42) மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனா்.