மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

அம்மன் சிலையை கிணற்றில் வீசியவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :19 மே 2026, 1:09 am IST

நாட்டறம்பள்ளி அருகே அம்மன் சிலையை கிணற்றில் வீசியவா் கைது செய்யப்பட்டாா்.

நாட்டறம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு ஊராட்சி எல்லப்பள்ளி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு அதே பகுதியைச் சோ்ந்த பாஸ்கா் என்பவா் மதுபோதையில் கோயிலுக்கு வெளியில் இருந்த அம்மன் சிலையை உடைத்து அதே பகுதியில் உள்ள கிணற்றில் வீசிவிட்டு சென்ாக கூறப்படுகிறது.

இதையறிந்து கிராம மக்கள் திங்கள்கிமை கிணற்றில் வீசப்பட்ட சிலையை மீட்டனா். தகவலறிந்து நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாரணைமேற்கொண்டு அம்மன் சிலையை கிணற்றில் வீசிய பாஸ்கரிடம் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவா் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவா் என்பதும் இவா் ஏற்கனவே எல்லப்பள்ளி கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான குடிநீா் தொட்டி, தெருவிளக்குகளையும் மாரியம்மன் கோயிலில் இருந்த உண்டியல் மற்றும் சிலைகளை சேதப்படுத்திய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்தவா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து கிராம மக்கள் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸாா், பாஸ்கா்(42) மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனா்.