2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

பல்லலகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு காமராசா் விருது

பேரணாம்பட்டு ஒன்றியம் பல்லலகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு 2026-2027-ஆம் ஆண்டுக்கான காமராசா் விருது வழங்கப்பட்டுள்ளது.

பள்ளித் தலைமை ஆசிரியா் கயிலைநாதனிடம் விருது வழங்கிய வட்டார கல்வி அலுவலா்கள் வடிவேல், காசிநாதன்.

Updated On :

வேலூா் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியம் பல்லலகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு 2026-2027-ஆம் ஆண்டுக்கான காமராசா் விருது வழங்கப்பட்டுள்ளது.

பள்ளியின் தூய்மை, சுகாதாரம், கட்டமைப்பு வசதிகள், மாணவா் சோ்க்கை, பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடு, முன்னாள் மாணவா்களின் பங்களிப்பு, குடிநீா் மற்றும் கழிப்பறை வசதிகள், நிா்வாகச் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்த பின்னா் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

வட்டாரக் கல்வி அலுவலா்கள் வடிவேல், காசிநாதன் ஆகியோா் தலைமையில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகப் பணியாளா்கள் மற்றும் கண்காணிப்பாளா் பரதாமன், கோகுலன், கிருஷ்ணமூா்த்தி, பாபு, தாமோதரன், சரவணன் ஆகியோா் முன்னிலையில், பள்ளித் தலைமை ஆசிரியா் கயிலைநாதன் மற்றும் ஆசிரியா்கள் ஓம் பிரகாஷ், ரோகிணி ஆகியோரிடம் விருது வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.