அக்டோபரில் வாகன விற்பனை 23.8% சரிவு!தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!தீபாவளி: தமிழ்நாட்டில் 2 நாள்களில் ரூ. 441 கோடிக்கு மது விற்பனை!அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை: இன்று விசாரணை!

தீபாவளி விடுமுறை: ஏலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தீபாவளி விடுமுறையில் ஏலகிரி மலை சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்த குடும்பத்துடன் படகில் சவாரி செய்து மகிழ்ந்தனா்.

குடும்பத்துடன் படகில் சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :

தீபாவளி விடுமுறையில் ஏலகிரி மலை சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்த குடும்பத்துடன் படகில் சவாரி செய்து மகிழ்ந்தனா்.

தீபாவளி விடுமுறையை ஒட்டி ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்து பல்வேறு இடங்களை கண்டு ரசித்து குடும்பத்துடன் படகில் சவாரி செய்து மகிழ்ந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டு ஒரே மாதிரியான சீதோஷ்ன நிலை இருந்து வருவதால், தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கா்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் சுற்றுலா பயணிகள் ஏலகிரிக்கு வந்து செல்கின்றனா்.

குறிப்பாக விடுமுறை நாள்களில் தனி பேருந்து மூலமும், காா், பைக் போன்றவற்றிலும் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாத்தலத்தில் குவிகின்றனா். மேலும், இங்குள்ள இயற்கை பூங்கா, சிறுவா் பூங்கா, படகு துறை, முருகன் கோயில், கனகநாச்சியம்மன் கோயில், நிலாவூா் படகுதுறை, செயற்கை நீரூற்று உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டு களித்து மகிழ்கின்றனா்.

இந்த நிலையில், தீபாவளி தொடா் விடுமுறையை ஒட்டி கடந்த இரு நாள்களாக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு வந்து, பல்வேறு பொழுதுபோக்கு கூடங்களில் விளையாடியும், குடும்பத்துடன் படகில் சவாரி செய்தும் பூங்காக்கள் மற்றும் நீரூற்றுப் பகுதியில் தற்படம் எடுத்தும் மகிழ்ந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.