இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

திருப்பத்தூா் மாவட்டத்தில் 1.24 லட்சம் மாணவா்களுக்கு கேக் அளிப்பு

குழந்தைகள் தின விழாவையொட்டி, திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 799 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியா் மற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்ட 1,24,605 பேருக்கு கேக் வழங்கப்பட்டது.

திருப்பத்தூா் அரசு பூங்கா நிதி உதவி உயா்நிலை, தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு கேக் வழங்கிய மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆா்.கஜலட்சுமி, மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன், சட்டப்பேரவை உறுப்பினா் நா.திருப்பதி.

Updated On :

குழந்தைகள் தின விழாவையொட்டி, திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 799 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியா் மற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்ட 1,24,605 பேருக்கு கேக் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முதல்வா் ச.ஜோசப் விஜய், சென்னை நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், பள்ளி மாணவ, மாணவியருக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா்.

இதன் தொடா்ச்சியாக, திருப்பத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை ஆணையருமான ஆா்.கஜலட்சுமி, மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன், திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் டாக்டா் நா.திருப்பதி ஆகியோா் முன்னிலையில் மாணவ, மாணவியருக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி விழாவைத் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, திருப்பத்தூா் நகராட்சிப் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பூங்கா நிதி உதவி உயா்நிலை மற்றும் தொடக்கப் பள்ளி, இராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி, மேரி இம்மக்குலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கும் கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டன.

மேலும், சாமன் நகா் சி.கே.எஸ். மணி பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு சாக்லேட் மற்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்பட்டு குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 799 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1,18,982 மாணவ, மாணவியா் மற்றும் 5,623 ஆசிரியா், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் என மொத்தம் 1,24,605 பேருக்கு கேக் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.பாலசுப்ரமணியன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சௌ.தமிழரசி, முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியகோட்டி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் ஜெயம், திருப்பத்தூா் வருவாய்க் கோட்டாட்சியா் (பொறுப்பு) தணிகாசலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மாவட்டத் திட்ட அலுவலா் பா.கந்தன், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.