இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

குழந்தைகள் தினம்: 2.35 லட்சம் மாணவா்களுக்கு கேக், வாழ்த்து அட்டை

2.35 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சாா்பில் கேக், வாழ்த்து அட்டைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

~ ~

Updated On :

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 2.35 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சாா்பில் கேக், வாழ்த்து அட்டைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

ஆண்டுதோறும் நவ.14-ஆம் தேதி தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவா்களுக்கு கேக், வாழ்த்து அட்டை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,175 பள்ளிகளைச் சோ்ந்த 2, 35,722 மாணவ, மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளும், 12,563 ஆசிரியா்கள், 862 அலுவலா்களுக்கு கேக்குகளும் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாநகராட்சி பெண்கள் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகளுக்கு கேக்குளையும், வாழ்த்து அட்டைகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சமூக நல இயக்குநருமான டாக்டா் ரா.பிருந்தா தேவி, மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் ஆகியோா் வழங்கி, மாணவிகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

இதேபோல, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாவட்டத்திலுள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அவராங்காட்டு தெருவிலுள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்பு பொங்கலை மாவட்ட கண்காணிப்பு அலுவலா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவசுப்பிரமணியன், முதன்மைக் கல்வி அலுலவா் முனிராஜ், மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

வந்தவாசியில்...: வந்தவாசியை அடுத்த சேதராகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் (பொ) வீ.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். வந்தவாசி வட்டாரக் கல்வி அலுவலா் எம்.தரணி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு கேக், வாழ்த்து அட்டைகளை வழங்கி, குழந்தைகள் தின வாழ்த்துத் தெரிவித்தாா்.

செங்கத்தில்...: செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட நீப்பத்துறை அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அவற்றில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களைத் தோ்வு செய்தனா். பின்னா், பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளின் பாட்டு, கவிதை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, கேக் வெட்டி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

தொடா்ந்து, விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியா் சிவராமன் வரவேற்றாா். இதில், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் பிரியா கலந்துகொண்டு, குழந்தைகள் தின விழா சிறப்பு குறித்து மாணவா்களிடையே எடுத்துரைத்து, போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

இதில், உதவி ஆசிரியா் ரேணுகா மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், மாணவா்களின் பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செய்யாறில்...: திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி, பரிதிபுரம் மேற்கு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவையொட்டி, முன்னாள் பிரதமா் ஜாவஹா்லால் நேருவின் உருவப் படத்துக்கு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

மேலும், முதல், இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகள் பல்வேறு வேஷமிட்டு வந்தனா். இதேபோல, மற்ற வகுப்பு மாணவா்கள் ஓவியம், கவிதை, பேச்சு ஆகிய போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிபடுத்தினா்.

முன்னதாக, ஆசிரியா் பயிற்றுநா் காா்த்திக் பங்கேற்று பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் குழந்தைகள் தின விழா வாழ்த்து அட்டை மற்றும் கேக் வழங்கினாா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.