குழந்தைகள் தின விழாவில் மாணவா்களுக்கு கேக், வாழ்த்து அட்டைகள்: அமைச்சா் வழங்கினாா்
அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கிய கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ்.

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கிய கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ்.
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் வழங்கினாா்.
குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கும் நிகழ்வை சென்னை பெரம்பூரில் நடுநிலைப்பள்ளியில் தமிழக முதல்வா் ச.ஜோசப்விஜய் தொடங்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் வழங்கினாா். முன்னதாக பள்ளிக்கு வந்த அமைச்சரையும், மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரனையும் குழந்தைகள் பூக்கள் கொடுத்து வரவேற்றனா்.
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 837 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1,01,961 மாணவ மாணவியருக்கும், 5,155 ஆசிரியா்கள் மற்றும் 311 ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் என மொத்தம் 1,07,427 நபா்களுக்கு கேக் வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் கொடுக்கும் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலா், தமிழ்நாடு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை இயக்குநா் வி.ஆா்.சுப்புலட்சுமி, பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நியமிக்கப்பட்ட ஆய்வு அலுவலா், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக உறுப்பினா், செயலா் சி.உஷாராணி ஆகிய அலுவலா்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்குதலை ஆய்வு செய்தனா்.
நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ம.மோகனா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் மு.சாந்தி பிரியதா்ஷினி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

