சீன உளவாளியுடன் உறவு! என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங் பதவி விலகல்!இனி தத்கல், ஆர்ஏசி, கட்டண மாற்றம் இல்லை! புதிய வந்தே பாரத் சேவை பற்றிய முழு விவரம்கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தில் எதுவும் நடக்கவில்லை! நிர்மல் குமார்பட்டினப்பாக்கத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு குடியிருப்புகள்! முதல்வர் விஜய் உத்தரவுசென்னையில் 12 மினி தாலுகா அலுவலகங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவு!சென்னையிலேயே இப்படி ஒரு அசம்பாவிதம்; இது முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறமையின்மை! இபிஎஸ்தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி டிஜிபியிடம் திமுக புகார்!அரவிந்த் கேஜரிவாலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்!அன்பில் மகேஸ் வழக்கு! முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்!மதுரை பிரபல நகைக் கடையில் 500 சவரன் கொள்ளை!9.5 சிஜிபிஏ மாணவர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசனம்! விநோத அறிவிப்பை வெளியிட்ட கல்லூரிபுதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! 22 பயணிகள் காயம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?ஜம்முவில் காணாமல்போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு!

மாணவர்களுக்கு கேக், வாழ்த்து அட்டை... முதல்வர் விஜய் நாளை வழங்குகிறார்!

மாணவர்களுக்கு கேக்குகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கும் முதல்வர் விஜய்.

cm vijay

முதல்வர் விஜய் - கோப்புப்படம்

Updated On :

குழந்தைகள் நாளை முன்னிட்டு முதல்வர் விஜய் நாளை (நவ. 13), மாணவர்களுக்கு கேக்குகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவிக்கவுள்ளார்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் உத்தரவின் படி, குழந்தைகள் நாளைக் கொண்டாடும் விதமாக, நவ. 13-ல் (நாளை) அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உள்பட 61,84,566 நபர்களுக்கு கேக்குகள் (Cakes) வழங்க 9.27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பள்ளி மாணவர்களுக்குக் குழந்தைகள் நாள் வாழ்த்து அட்டைகள் வழங்கி குழந்தைகள் நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது.  

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கேக்குகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, அதனடிப்படையில் நான்கு பெருநிறுவனங்கள் வாயிலாக FSSAI தரத்திலுள்ள கேக்குகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த கேக்குகளின் முன்மாதிரிகள் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையரக அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. உரிய முறையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கேக்குகள் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்கப்பட்டு நாளை மாணவர்கள் அனைவருக்கும் கேக்குகளுடன் வாழ்த்து அட்டைகளும் வழங்கப்பட்டு குழந்தைகள் நாள் விழா கொண்டாடப்படவுள்ளது.

முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக (TNCSC) மண்டல மேலாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து, பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் கேக்குகள் வைக்கப்பட்டுள்ள TNCSC கூடங்கள் மற்றும் பள்ளிகளில் எலிகள், பூச்சிகள் போன்றவை இல்லாத வகையில் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள், பள்ளிகளில் மாணவர்களுக்கு கேக்குகள் வழங்கப்படுவதைக் கண்காணிப்பார்கள்.

குழந்தைகள் நாளை முன்னிட்டு முதல்வர் விஜய் மாணவர்களுக்கு கேக்குகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

On the occasion of Children's Day, Chief Minister Vijay will extend his greetings to students tomorrow (Nov. 13) by presenting them with cakes and greeting cards.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.