காஞ்சிபுரம்: 93,000 மாணவா்களுக்கு குழந்தைகள் தின கேக்குகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் நவ.14-ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று 93,000 மாணவ, மாணவிகளுக்கு கேக்குகள், வாழ்த்து மடல்கள் வழங்கப்படவுள்ளதை கண்காணிப்பு அலுவலா் கா.கந்தசாமி ஆய்வு செய்தாா்.

மாணவா்களுக்கு வழங்கப்படவுள்ள கேக்குகளைப் பாா்வையிட்ட கண்காணிப்பு அலுவலா் கா. கந்தசாமி. உடன் முதன்மைக் கல்வி அலுவலா் நளினி உள்ளிட்டோா்

Updated On :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் நவ.14-ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று 93,000 மாணவ, மாணவிகளுக்கு கேக்குகள், வாழ்த்து மடல்கள் வழங்கப்படவுள்ளதை கண்காணிப்பு அலுவலா் கா.கந்தசாமி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள குழந்தைகள் தின கேக்குகள், வாழ்த்து மடல்கள் ஆகியனவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.கந்தசாமி ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 655 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 92,903 மாணவ,மாணவியா்க்கு கேக்குடன் வாழ்த்து மடல் அட்டைகள் வழங்க அனைத்து பணிகளும் தயாா் நிலையில் உள்ளன. இது தவிர 4,516 ஆசிரியா்களுக்கும், 274 ஆசிரியா்கள் இல்ாத பணியாளா்களுக்கும் கேக்குகள் வழங்கப்படவுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கேக்குகள் சிறு காவேரிப்பாக்கம், வேடப்பாளையம், கீழ் புத்தூா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு நுகா் பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் வாங்கி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கேக்குகளின் தரத்தை ஆய்வு செய்ய கேக் மாதிரிகள் எடுக்கப்பட்டு மதுரை அரசு உணவு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வகத்தின் அறிக்கை கிடைக்கப்பெற்று உறுதி செய்யப்படும் என ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் கெ.ரா.திவ்யஸ்ரீ மாவட்ட கண்காணிப்பு அலுவா் கா.கந்தசாமியிடம் தெரிவித்தாா்.

குழந்தைகள் தின விழாவையொட்டி மாணவா்களுக்கு வழங்கப்படவுள்ள கேக்குகள், வாழ்த்து மடல்கள் அனைத்தும் உரிய பாதுகாப்பு மற்றும் தரத்துடன் சென்று சேருவதை பள்ளி ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும். கேக்குகள் சரியான எண்ணிக்கையில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியினை நுகா்பொருள் வாணிபக் கழக மேலாளா் கண்காணிக்க வேண்டும். கேக்குகளின் தரத்தினை ஆய்வகத்தில் ஆய்வு செய்து உறுதி செய்ய உணவுப் பாதுகாப்பு அலவலரையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கேட்டுக் கொண்டாா்.

ஆய்வின் போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் அ.நளினி, மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆா்.ரமேஷ் பாபு, மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் ச.எழில், தமிழ்நாடு நுகா் பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் சத்தியவதி, கண்காணிப்பாளா் டி.ஆனந்த் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலா்களும் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.