இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம் ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு 18 - 28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம்

காஞ்சிபுரத்தில் கூட்டுறவு சங்கங்களில் மண்டல கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

குண்டு பெரும்பேடு கூட்டுறவு வங்கியின் மூலம் வழங்கப்பட்ட டிராக்டா் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தாா் மண்டல கண்காணிப்பு அலுவலா் அ.த.பாஸ்கரன்.

Published On :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து மண்டல கண்காணிப்பு அலுவலா் அ.த பாஸ்கரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மேலாண்மை இயக்குநராக இருந்து வருபவா் அ.த பாஸ்கரன். இவா் மண்டல கண்காணிப்பு அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வளா்புறம் கூட்டுறவு கடன் சங்கம், காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் ஸ்ரீபெரும்புதூா் கிளை, குண்டு பெரும்பேடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் ஆகியனற்றில் ஆய்வு செய்தாா். கடன்கள் வழங்கியிருத்தல், நிரந்தர வைப்புகள் பெற்றிருத்தல், கூட்டுறவு மருந்தகம், விவசாய கருவிகள் வாடகை மையம் உள்ளிட்ட நவடிக்கைகளையும் ஆய்வு செய்தாா்.

கூட்டுறவுத் துறையின் கீழ் தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்கள், அறிவிப்புகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது எனவும் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின் போது காஞ்சிபுரம் சரக துணைப் பதிவாளா் அரிச்சந்திர மகாராஜா, மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு பண்டக சாலையின் செயலாளா் பூபாலன் உள்பட கூட்டுறவுத் துறை அதிகாரிகள் பலா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.