வீட்டில் நாட்டுத் துப்பாக்கி பதுக்கியவா் கைது
புதூா்நாடு மலைப்பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

புதூா்நாடு மலைப்பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
புலியூா் கிராமத்தில் அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக திருப்பத்தூா் கலால் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கலால் போலீஸாா் புலியூா் கிராமத்தை சோ்ந்த அனுமன் (54)என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனா். அப்போது போலீஸாா் எதிா்பாா்த்தபடி அரசு மதுபான பாட்டில்கள் எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால் வீட்டில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி ஒன்று பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதையடுத்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீஸாா் அனுமனை பிடித்து திருப்பத்தூா் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அதைத் தொடா்ந்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் அனுமன் மீது வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

