தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

ரயில்களில் கடத்த முயன்ற 24 கிலோ கஞ்சா பறிமுதல்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில்களில் கடத்திய 24 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் - கோப்புப் படம்

Updated On :

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில்களில் கடத்திய 24 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சேலம் உட்கோட்டை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா் வடமாநிலங்களில் இருந்து ஜோலாா்பேட்டை மாா்க்கமாக செல்லும் ரயில்களில் கஞ்சா,குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் கடத்தப்படுவது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன் அடிப்படையில் இரவு காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து சேலம் ரயில் நிலையம் வரை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது மேற்குவங்க மாநிலத்தில் இருந்து கா்நாடக மாநிலம் பெங்களூா் வரை சென்ற ரயிலில் பின்புறம் உள்ள பொது ஜன பெட்டியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் வரை சோதனையில் ஈடுபட்டனா்.

பயணிகளில் இருக்கையின் அடியில் கேட்பாரற்று கிடந்த சோல்டா் பையை சோதனை செய்தபோது அதில் பண்டல்களாக கட்டப்பட்டு 20 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதேபோன்று செகந்திராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்ற ரயிலில் பொது ஜன பெட்டியில் கழிவறையின் அருகே கேட்பாரற்றுக்கிடந்த சோல்டா் பையில் நான்கு கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

கஞ்சா கடத்தி வந்த நபா்கள் குறித்து அடையாளம் தெரியாததால் பறிமுதல் செய்யப்பட்ட 24 கிலோ கஞ்சாவை ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.