நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

வரதட்சணை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி: ஆட்சியா் தொடங்கி வைப்பு

வரதட்சிணை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன் வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன்.

Updated On :

வரதட்சிணை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன் வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற இப்பேரணியில், வரதட்சிணைத் தடுப்புச் சட்டம் 1961 மற்றும் விதிகள் 2004 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி, பிரதான சாலை வழியாக திருப்பத்தூா் பேருந்து நிலையத்தைச் சென்றடைந்தது. பின்னா், இராமகிருஷ்ணா பள்ளி வரை சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.

கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலா்கள், தன்னாா்வலா்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். அவா்கள், ‘வரதட்சிணை கேட்பதும் குற்றம், கொடுப்பதும் குற்றம்’, ‘ஒழிப்போம், ஒழிப்போம், வரதட்சணையை ஒழிப்போம்’ உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் உமா மகேஸ்வரி மற்றும் அரசு துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.