கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

வழக்குரைஞா்கள் குழுவில் இடம்பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் பட்டியல் இனத்தவா் மற்றும் பழங்குடியினா் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் குற்றவியல் வழக்குகளைத் நடத்துவதற்காக அமைக்கப்படவுள்ள மூத்த வழக்குரைஞா்கள் குழுவில் இடம்பெற தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்

Updated On :

திருப்பத்தூா் மாவட்டத்தில் பட்டியல் இனத்தவா் மற்றும் பழங்குடியினா் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் குற்றவியல் வழக்குகளைத் நடத்துவதற்காக அமைக்கப்படவுள்ள மூத்த வழக்குரைஞா்கள் குழுவில் இடம்பெற தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வே.நல்லசிவன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பட்டியல் இனத்தவா் மற்றும் பழங்குடியினா் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம், 1989-இன் கீழ் பதிவு செய்யப்படும் குற்றவியல் வழக்குகள் மற்றும் அவை தொடா்பான இதர நடவடிக்கைகளைத் திறம்பட மேற்கொள்வதற்காக, 5 சிறந்த மூத்த வழக்குரைஞா்களைக் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது.

இக்குழுவில் இடம்பெற விரும்பும் வழக்குரைஞா்கள், குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் தொடா்ந்து வழக்குரைஞராகப் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும், குற்றவியல் வழக்குகளையும், குறிப்பாக பட்டியல் இனத்தவா் மற்றும் பழங்குடியினா் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் நடத்துவதில் போதிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா்களுக்கான வயது உச்சவரம்பு 60 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 60 வயதை அடையும்போது, அரசு சிறப்பு உத்தரவு பிறப்பிக்காதவரை குழுவில் இடம்பெறும் தகுதி முடிவடையும்.

மேற்கண்ட தகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு மாநில நீதிமன்றங்களில் வழக்குரைஞா் தொழில் புரிபவா்கள், தங்களது விருப்பக் கடிதத்துடன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களைப் பூா்த்தி செய்து, இணைப்பு- ஐ மற்றும் இணைப்பு- ஐஐ படிவங்களைத் தலா 6 பிரதிகளாகவும், இரண்டு கடவுச்சீட்டு அளவு புகைப்படங்களுடனும் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டிச.11-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் ஆட்சியா் அலுவலகத்தில் கிடைக்குமாறு சமா்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்துக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.