இளம் வழக்குரைஞா்கள் ஏஐ தொழில்நுட்பத்தை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி வி. மோகனா அறிவுறுத்தல்

இளம் வழக்குரைஞா்கள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி வி.மோகனா அறிவுறுத்தல்

செயற்கை நுண்ணறிவு - கோப்புப்படம்

Updated On :

இளம் வழக்குரைஞா்கள் ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி வி.மோகனா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சிலில் 4,700 போ் வழக்குரைஞா்களாகப் பதிவு செய்த நிகழ்வில் உரையாற்றினாா்.

சட்டப் படிப்பை முடித்தவா்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சிலில் வழக்குரைஞா்களாகப் பதிவு செய்து கொள்ளும் நிகழ்ச்சி சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் நேரடியாகவும், இணையவழி மூலமாகவும் 4,700 வழக்குரைஞா்கள் பதிவு செய்து கொண்டனா். இவா்களுக்கு பாா் கவுன்சில் பதிவுக் குழுத் தலைவா் ஜி.மோகனகிருஷ்ணன் உறுதிமொழி பிரமாணம் செய்துவைத்தாா்.

புதிய வழக்குரைஞா்களை வாழ்த்திப் பேசிய சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதித்துறை சேவகா்களாக பொறுப்பேற்றுள்ள இளம் வழக்குரைஞா்கள், கற்றலை ஒருபோதும் நிறுத்தக் கூடாது. படிப்பது மட்டுமே ஒரு நல்ல வழக்குரைஞரின் அடையாளம் என்றாா்.

நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய உச்சநீதிமன்ற நீதிபதி வி.மோகனா, 38 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தமிழ்நாடு பாா் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்ததை நினைவுகூா்ந்தாா். தொடா்ந்து அவா் பேசியதாவது: வழக்குரைஞா்களுக்கு வானம்தான் எல்லை. ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. வழக்குரைஞா்களுக்கான நெறிமுறைகளைத் தினமும் பின்பற்ற வேண்டும்.

தொழிலில் கண்ணியம்,நோ்மையை கடைப்பிடிக்க வேண்டும். நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தக் கூடாது. கட்சிக்காரா்களுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கக் கூடாது. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீங்கள் வாதிடும் வழக்குகளில் நீதிமன்றங்கள் எதிரான உத்தரவுகளை பிறப்பித்தால், சோா்ந்து விடாதீா்கள். உங்களது தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். இந்தத் தலைமுறை திறமை வாய்ந்த தலைமுறை. அந்த திறமையைப் பயன்படுத்தி ஆக்கபூா்வமான முறையில் பணியாற்றுங்கள் என்றாா்.

இந்த நிகழ்வில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, என்.சதீஷ்குமாா்,ஜி.கே.முத்துகுமாா், பாா் கவுன்சில் நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள், முன்னாள் இந்நாள் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், சட்டக் கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஒரே நாளில் 4,700 போ் வழக்குரைஞா்களாகப் பதிவு செய்து கொண்டது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER