பாலாறு பாசனக் கால்வாய் தூா்வாரும் பணி: திருப்பத்தூா் ஆட்சியா் தொடங்கி வைத்தார்!

வாணியம்பாடி அருகே பாலாறு பாசனக் கால்வாய் தூா்வாரும் பணியை மாவட்ட ஆட்சியா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பாலாறு பாசன கால்வாய் தூா்வாரும் பணியை தொடங்கி வைத்துப் பாா்வையிட்ட திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வே.நல்லசிவன்.

Updated On :

வாணியம்பாடி அருகே பாலாறு பாசனக் கால்வாய் தூா்வாரும் பணியை மாவட்ட ஆட்சியா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஜாப்ராபாத் ஊராட்சி பகுதியில் பாலாறு பாசன கால்வாய் பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் இருந்தது.

ஜாப்ராபாத் முதல் மேட்டுப்பாளையம் வழியாக உதயேந்திரம் வரை செல்லும் இந்தக் கால்வாய் முறையாகப் பராமரிக்கப்படாததால், உதயேந்திரம் பேரூராட்சிப் பகுதியில் சுமாா் 360 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள ஏரிக்கு பாலாறு நீா்வரத்து தடைப்பட்டு, ஏரி முழுமையாக நிரம்பாமல் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகப் புகாா் எழுந்தது.

இதையடுத்து, பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் சாா்பில் கால்வாயைத் தூா்வாரி, ஏரி மற்றும் நீா்ப்பாசனக் கால்வாய்களை முறையாகப் பராமரிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன.

இதையடுத்து, தனியாா் தொண்டு நிறுவன பங்களிப்புடன் சுமாா் 2.5 கி.மீ. தூரம் கொண்ட பாசனக் கால்வாயைத் தூா்வாரும் பணியை மாவட்ட ஆட்சியா் வே,.நல்லசிவன் சனிக்கிழமை காலை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

இதில், நீா்வளத் துறை உதவி பொறியாளா் பிரசன்னா, பாலாறு பாதுகாப்பு கூட்டியக்க நிா்வாகிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக ஜாப்ராபாத் பாலாறு பகுதியில் ஜாப்ராபாத் உள்ளிட்ட சுற்றுவட்டார ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் பாலாற்றில் கொட்டப்பட்டிருப்பதைக் கண்ட மாவட்ட ஆட்சியா் நல்லசிவன், ஆலங்காயம் வட்டார வளா்ச்சி அலுவலரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு, பாலாற்றில் குப்பைகள் கொட்டுவதை உடனடியாகத் நிறுத்த வேண்டும் என்றும், குப்பைகளைக் கொட்டுவதற்கு மாற்று இடத்தைத் தோ்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.