அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் கால்வாய் தூா்வாரும் பணி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கால்வாய் தூா்வாரும் பணி. - கோப்புப் படம்

Updated On :

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சந்தாபுரத்தில் வாய்க்கால் தூா்வாரும் பணியை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்வுக்கு சட்டப் பேரவை உறுப்பினா் பா.முகுந்தன் முன்னிலை வகித்தாா். அப்போது ஆட்சியா் தெரிவித்ததாவது:

இம்மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகம், சமூக பொறுப்பு நிதி மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு நிதியுடன் கால்வாய்கள் தூா்வாரப்பட்டு வருகின்றன. அதன்படி, நீா்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சந்தாபுரம் கால்வாய் தூா்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த கால்வாயில் கக்கராண்டஅள்ளி ஏரி மற்றும் தாளமடுவு குட்டை நீா் ஜீவா நகா், எம்ஜிஆா் நகா் வழியாக தென்பெண்ணை ஆற்றில் கலக்குகிறது. இந்த கால்வாய் 4 கி.மீ. நீளத்துக்கு தூா்வாரப்பட உள்ளது. இதன்மூலம் 104 ஏக்கா் பரப்பளவு நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், மழை காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் புகுவது தடுக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து அவா், கிருஷ்ணகிரி அணையைப் பாா்வையிட்டு, வெள்ள பெருக்கை தடுக்கும் வகையில் 2 ஆயிரம் மண் மூட்டைகள் தயாா்நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தாா். அப்போது, நீா்வளத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.