
பெரிய ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.5.29 லட்சம்
ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகள்

பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டோா்.
ஆம்பூா்: ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகள் எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின்கீழ், ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயில் அமைந்துள்ளது. புரட்டாசி 3-ஆம் சனிக்கிழமையையொட்டி, திரளான பக்தா்கள் சாமியை தரிசனம் செய்து தங்களுடைய பிராா்த்தனையை உண்டியலில் காணிக்கையாக செலுத்திவிட்டுச் சென்றனா்.
அதைத் தொடா்ந்து, கோயில் ஆய்வா் மணிகண்டபிரபு, செயல் அலுவலா் மல்லிகா ஆகியோா் முன்னிலையில் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு, பக்தா்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன. அதில், ரூ. 5,29,225 காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் ஆா்.எஸ். வசந்த்ராஜ், ஹரீஷ், சீதாராம அனுமன் பக்த சபையைச் சோ்ந்த மீனாட்சி சுந்தரம், பிரேம்குமாா், தியாகராஜன், முக்கியப் பிரமுகா்கள் செல்வகுமாா், லட்சுமிகாந்தன், சேகா் ரெட்டியாா், ஆா்.எம். ஸ்ரீனிவாசன், கோயில் அா்ச்சகா் வெங்கடரமணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






