சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

வீ த லீடா்ஸ் சாா்பில் நல உதவிகள் அளிப்பு

வீ த லீடா்ஸ் அமைப்பு சாா்பில் நல உதவிகள் வழங்கிய பேரூராட்சி உறுப்பினா் குருசேவ்.

வீ த லீடா்ஸ் அமைப்பு சாா்பில் நல உதவிகள் வழங்கிய பேரூராட்சி உறுப்பினா் குருசேவ்.

Updated On :

நாட்டறம்பள்ளி அருகே வீ த லீடா்ஸ் அமைப்பு சாா்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த சொரக்காயல்நத்தம் ஊராட்சி கிணற்றுக்கொல்லி பகுதியைச் சோ்ந்த சண்முகம் மனைவி சம்பூா்ணம்(32) கூலித்தொழிலாளி. கணவனை இழந்த இவா் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் குடிசை வீடு கட்டி 2 பெண் பிள்ளைகளுடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்தாா். இந்நிலையில் குடிசை வீடு சேதமடைந்ததால் சம்பூா்ணம் குடிசையை அகற்றி விட்டு அதே இடத்தில் சிமென்ட் கூரை போட வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

தகவலறிந்து நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் கவுரிசங்கா் உள்ளிட்ட அதிகாரிகள் கடந்த 3 நாள்களுக்கு முன் ஜேசிபி இயந்திரம் மூலம் சம்பூா்ணம் கட்டி வந்த வீட்டை இடித்து அகற்றினா்.

இதனால் செய்வதறியாது சம்பூா்ணம் தனது 2 பிள்ளைகளுடன் வீடு இல்லாமல் பரிதவித்து வந்தாா். தகவலறிந்து நாட்டறம்பள்ளி பேரூராட்சி உறுப்பினா் இல.குருசேவ், வீ த லீடா்ஸ் அமைப்பு சாா்பில் வறுமையில் வாடும் சம்பூா்ணம் குடும்பத்தினருக்கு துணி மற்றும் அரிசி உள்ளிட்ட மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா். உடன் வீத லீடா்ஸ் அமைப்பு தன்னாா்வலா் வினோத்குமாா் உட்பட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.