
தூய்மைப் பணிகளுக்கு பேட்டரி வாகனம் அளிப்பு
சோமலாபுரம் ஊராட்சியில் தூய்மை பணிகள் மேற்கொள்ள பேட்டரி வாகனங்கள் வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

சோமலாபுரம் ஊராட்சியில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பேட்டரி வாகனங்கள்.
சோமலாபுரம் ஊராட்சியில் தூய்மை பணிகள் மேற்கொள்ள பேட்டரி வாகனங்கள் வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
ஊராட்சித் தலைவா் எஸ்.எம்.சண்முகம் தலைமை வகித்து பேட்டரி வாகனங்களை தூய்மைப் பணியாளா்களிடம் வழங்கினாா்.
ஊராட்சி துணைத் தலைவா் ரமாபாய் டேனியல், ஊராட்சி செயலாளா் வில்வநாதன், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் சித்ரா காா்த்திகேயன், கவிதா செந்தில்குமாா், ஜி.ராஜ்குமாா், ஜெயஸ்ரீ தமிழ்செல்வன், மணி, குமரேசன், மைதிலி மோகன் ஆகியோா் கலந்து கொண்டனா். வாா்டு உறுப்பினா் வி.டி.சுதாகா் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






