ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

பிளாஸ்டிக் ஒழிப்பு எதிரொலி:  வீட்டு வரி செலுத்துவோருக்கு இலவச துணிப்பை வழங்க நடவடிக்கை

திருவள்ளூர் நகராட்சியில் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் ஒழிக்கும் வகையில், வீட்டு வரி செலுத்துவோருக்கு இலவச துணிப்பைகள் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Updated On :2 ஆகஸ்ட் 2018, 6:33 am IST

திருவள்ளூர் நகராட்சியில் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் ஒழிக்கும் வகையில், வீட்டு வரி செலுத்துவோருக்கு இலவச துணிப்பைகள் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
  தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை அடுத்த ஆண்டு முதல் முற்றிலும் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து உள்ளாட்சி அமைப்புகளில் பேரணிகள் நடத்துதல், துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல் போன்றவை மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 
   இதேபோல், திருவள்ளூர் நகராட்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் மூலம் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கிடையே நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கும் வகையில், துணிப்பைகளின் பயன்பாடு குறித்து ஒவ்வொருவரிடமும் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது, நகராட்சியில் வீட்டு வரி, தண்ணீர் வரி செலுத்துவோருக்கு காய்கறிகள் வாங்க இலவச துணிப்பைகள் வழங்கப்படவுள்ளன. இதில், முதல் கட்டமாக ரூ.1 லட்சம் மதிப்பில், 10 ஆயிரம் துணிப்பைகள் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக  நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.