போதைப் பொருள் கடத்தல்: இளைஞர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே, போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில், ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா போதைப்பொருள்களைக் கடத்தி வந்த இளைஞர்

கும்மிடிப்பூண்டி அருகே, போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில், ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா போதைப்பொருள்களைக் கடத்தி வந்த இளைஞர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள காட்டுக் கொல்லைத் தெரு பகுதியில் இருந்து குட்கா போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல்கள் வந்தன. இதைத் தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி காட்டுக் கொல்லைத் தெரு பகுதியில் உதவி ஆய்வாளர் (பொறுப்பு) மாரிமுத்து தலைமையில் போலீஸார் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மாருதி ஆம்னி வேனில் 9 மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக ஆம்னி வேனை ஓட்டி வந்த பொன்னேரி -ஆண்டார்குப்பம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் மூர்த்தியை (28) போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது, ஆம்னி வேனின் உரிமையாளர் பொன்னேரியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பதும், அவர் போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைவர் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து, குட்கா போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸார், இதுகுறித்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

