இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

அரிசி வணிகர் சங்கத்தினர், மண்டல அலுவலகத்தில் சுதந்திர தின விழா

செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அரிசி வணிகர்கள் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அரிசி வணிகர்கள் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 
சங்க வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கோபி தலைமை வகித்தார். 
இதில் அரிசி ஆலை உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் துளசிங்கம், சங்க நிர்வாகிகள் ஜெயபால் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழாவையொட்டி சங்கத்தின் சார்பில் பல்வேறு நல உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
மாதவரம் மண்டல அலுவலகத்தில்...
மாதவரம் மண்டல அலுவலகத்தில் சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 
சென்னை மாதவரம்  மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், உதவி ஆணையர் விஜயகுமார் கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றினார்.
 நிகழ்வில், மாதவரம் மண்டல  செயற்பொறியாளர் ராமமூர்த்தி, பொறியாளர்கள் தேவேந்திரன், கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.