முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பொன்னேரியில் மாநகரப் போக்குவரத்து பணிமனை தேவை: பொதுமக்கள் கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்கப்பட வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும்

Updated On :26 டிசம்பர் 2018, 3:11 am IST


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்கப்பட வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி தாலுகாவில் பொன்னேரி, மீஞ்சூர், ஆரணி, காரனோடை, பழவேற்காடு, ஆகிய நகர் பகுதிகளும் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களும் அமைந்துள்ளன. பொன்னேரி-செங்குன்றம் சாலையில் கடந்த 20-ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து, கோயம்பேடு, திருச்சி, புதுச்சேரி, திருப்பதி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், காளஹஸ்தி, தடா, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்கள் மற்றும் பொன்னேரியைச் சுற்றிலும் உள்ள கிராமங்களுக்கு 60-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 
சென்னையைச் சுற்றிலும் இயக்கப்பட்டு வந்த மாநகரப் பேருந்துகளின் தூரம் நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொன்னேரி, பழவேற்காடு, ஆலாடு, தத்தைமஞ்சி, புதுச்சேரி மேடு, பெரும்பேடு, காட்டூர், ரெட்டிப்பாளையம், பெரிய மனோபுரம், சின்னமனோபுரம், கோளூர், புதுச்சேரிமேடு, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 20-க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 
பொன்னேரி பகுதிக்கு இயக்கப்பட்டு வரும் சென்னை மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் பெரும்பாலானவை, பாடியநல்லூர் பணிமனையில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. பொன்னேரி வழியாக பழவேற்காடுக்கு இயக்கப்படும் மாநகரப் பேருந்து பொன்னேரி, பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் செல்லும் போது, டயர் பஞ்சர் மற்றும் பழுது ஏதேனும் ஏற்பட்டால், பாடியநல்லூர் பணிமனையில் இருக்கும் ஊழியர்கள் வந்து அதனை சரி செய்த பின்னரே, பேருந்தை இயக்க முடியும் எனும் நிலை உள்ளது. இதுபோன்ற நேரங்களில் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது. 
இதுகுறித்து பொன்னேரி பகுதியில் வசிக்கும் சமூல நல ஆர்வலர்கள் கூறுகையில், சென்னையைச் சுற்றிலும் மட்டும் இயங்கி வந்த மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகள் தற்போது சென்னையில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. பொன்னேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பாடியநல்லூர் பணிமனையில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 
இப்பகுதிக்கு இயக்கப்படும் பேருந்துகளில் திடீரென ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதனைச் சரி செய்ய கால விரயம் ஏற்படுகின்றது. இதனைத் தவிர்க்க பொன்னேரி பகுதியில் மாநகரப் போக்குவரத்துக் கழக பணிமனையை அமைத்து, இப்பகுதியில் உள்ள கிராம பகுதிகளுக்கு அதிக அளவிலான பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.