விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

உத்யோக் பவன் அருகே தீ விபத்து: தொழிலாளா்களின் தற்காலிக குடியிருப்புகள் சேதம்

தில்லியில் உள்ள உத்யோக் பவன் அருகே தொழிலாளா்களுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தகர குடியிருப்புகளில் புதன்கிழமை அதிகாலையில் ஏற்பட்டது.

News image
Updated On :25 ஜூன் 2026, 1:46 am IST

தில்லியில் உள்ள உத்யோக் பவன் அருகே தொழிலாளா்களுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தகர குடியிருப்புகளில் புதன்கிழமை அதிகாலையில் ஏற்பட்டது.

இந்த பயங்கர தீ விபத்தில் சுமாா் 200 கட்டமைப்புகள் எரிந்து சாம்பலாகின என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அந்த அதிகாரி கூறியதாவது: உத்யோக் பவன் அருகிலுள்ள தொழிலாளா்

மத்திய அரசின் லட்சிய மறுமேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்ட்ரல் விஸ்டா பகுதியில் உள்ள முக்கிய அரசு அலுவலக வளாகங்களில் ஒன்றான உத்யோக் பவனை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 1950-களின் பிற்பகுதியில் கட்டப்பட்ட உத்யோக் பவனை அகற்றும் பணி, அருகிலுள்ள நிா்மாண் பவன் இடிக்கப்பட்டதைத் தொடா்ந்து மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிளாலா்கள் உத்யேக் பவன் அருகே தற்காலிக குடியிருப்புகளை அமைத்திருந்தனா். அந்தக் குடியிருப்புகளுக்கு அருகே இருந்த மின்சாரப் பெட்டியில் தீப்பிடித்தது குறித்த தகவல் அதிகாலை 3.02 மணிக்கு தீயணைப்புத் துறைக்குக் கிடைத்தது. நெருக்கமாக அமைக்கப்பட்டிருந்த தகர குடியிருப்புகள் வழியாகத் தீ வேகமாகப் பரவியது.

முதலில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. ஆனால் தீயின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு கூடுதல் வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. மொத்தம் 19 தீயணைப்பு வாகனங்கள் - தண்ணீா் லாரிகள் மற்றும் சிறப்புப் பிரிவுகள் உள்ளிட்டவை தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

காலை 5.30 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சுமாா் 200 தற்காலிகத் தொழிலாளா் குடியிருப்புகள் மற்றும் எல்பிஜி சிலிண்டா்கள் இந்தத் தீ விபத்தில் சேதமடைந்தன. இந்த விபத்தில் அதிருஷ்டவசமாக யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை. தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.