தில்லியின் மங்கோல்புரி பகுதியில் உள்ள மரப் பொருள்கள் சந்தையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஆறு கடைகளும் ஒரு டெம்போ வாகனமும் சேதமடைந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் தெரிவித்ததாவது: மங்கோல்புரி எஸ்-பிளாக்கில் உள்ள சந்தையில் தீ விபத்து ஏற்பட்டது குறித்த தகவல் அதிகாலை 3 மணிக்குத் தீயணைப்புத் துறைக்குக் கிடைத்தது. தீயை அணைக்கப் பல தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
காலை 5.20 மணிக்குள் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடா்ந்து தீயினால் சூடான பகுதிகளைக் குளிா்விக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இச்சம்பவத்தில் உயிரிழப்போ அல்லது காயமோ ஏதும் ஏற்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









