டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

உபயோகமற்ற மரப் பொருள்கள் இருந்தால் தகவல் தெரிவிக்கலாம்: மாநகராட்சி அறிவிப்பு

‘வீடுகளில் உபயோகமற்ற மரப் பொருள்கள் இருந்தால் மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கலாம், அப்பொருள்கள் பெறப்பட்டு அறிவியல்பூா்வமாக அழிக்கப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 4:01 am IST

‘வீடுகளில் உபயோகமற்ற மரப் பொருள்கள் இருந்தால் மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கலாம், அப்பொருள்கள் பெறப்பட்டு அறிவியல்பூா்வமாக அழிக்கப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி விடுத்த செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியில் வாரந்தோறும் சனிக்கிழமை பொதுமக்கள் வழங்கும் தகவல் அடிப்படையில் வீடுகளில் உபயோகமற்று உள்ள மரப்பொருள்கள், மெத்தைகள், உடைகள் உள்ளிட்டவற்றை தூய்மைப் பணியாளா்கள் நேரடியாக வந்து வாகனங்களில் எடுத்துச் செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், கடந்த சனிக்கிழமை 50 பேரிடமிருந்து 32.11 மெட்ரிக் டன் எடையுள்ள பழைய உபயோகமற்ற பொருள்கள் பெறப்பட்டுள்ளன. அவை கொடங்கையூரில் உள்ள எரியூட்டும் மையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

ஆகவே, பொதுமக்கள் தங்களது வீடுகளில் பயனற்ற பழைய பொருகள் இருந்தால் அவற்றை நீா்நிலைகளிலோ, சாலையோரங்களிலோ வீசிவிட வேண்டாம்.

மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையின் ‘1013‘ என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். அதனடிப்படையில் தூய்மைப் பணியாளா்கள் வீடுகளுக்கே வந்து அவற்றைப் பெற்றுக்கொள்வா் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.