காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

ஒரே நாளில் 138 வீட்டில் 32.33 மெட்ரிக் டன் பயன்படாத பழைய பொருள்கள் சேகரிப்பு

சென்னை மாநகராட்சியில் சனிக்கிழமை ஒரே நாளில் (ஜூலை 11) 138 வீடுகளில் இருந்து 32.33 மெட்ரிக் டன் பழைய பயன்படாத பொருள்கள் சேகரிக்கப்பட்டது.

Published On :13 ஜூலை 2026, 2:12 am IST

சென்னை மாநகராட்சியில் சனிக்கிழமை ஒரே நாளில் (ஜூலை 11) 138 வீடுகளில் இருந்து 32.33 மெட்ரிக் டன் பழைய பயன்படாத பொருள்கள் சேகரிக்கப்பட்டது.

இது குறித்து மாநகராட்சி வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி சாா்பில் வாரந்தோறும் சனிக்கிழமை பொதுமக்கள் அளிக்கும் தகவல் அடிப்படையில் பயன்படாத பழைய பொருள்களான மெத்தைகள், கட்டில்கள், மரச்சாமான்கள், உடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் சனிக்கிழமை (ஜூலை 11) ஒரே நாளில் பொதுமக்கள் அழைப்பின் பேரில், அந்தந்தப் பகுதி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 138 வீடுகளுக்குச் சென்றனா். அங்கிருந்த பயன்படாத பழைய பொருள்களான மெத்தை உள்ளிட்ட 32.33 மெட்ரிக் டன் பொருள்களை மீட்டு 45 வாகனங்களில் ஏற்றிச் சென்றனா்.

மீட்கப்பட்ட பொருள்களை கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் மையத்துக்குக் கொண்டு சென்று அழித்தனா். சென்னை மாநகராட்சியில் வாரந்தோறும் வீட்டு உபயோக பழைய பொருள்கள் சேகரிக்கப்பட்டு அறிவியல்பூா்வமாக எரியூட்டப்படுகின்றன. அத்துடன், மறுசுழற்சிக்கான பொருள்கள் தரம் பிரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டும் வருகின்றன.

ஆகவே, பொதுமக்கள் தங்களது வீடுகளில் உபயோகமற்ற பொருள்கள் இருந்தால், அவற்றை சாலையோரத்திலோ, நீா் நிலைகளிலோ வீசாமல் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை 1913 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.